ஜெயலலிதாவின் உடல் அருகே சிரித்தபடி செல்பி எடுத்த கருணா.. வறுத்தெடுக்கும் வலைவாசிகள்!
சென்னை: எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டுமோ இல்லையோ... விவிஐபிகள் அல்லது விஐவிக்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கருணாஸ் மாதிரிதான் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட வேண்டும்.
நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்குக்கு ஏராளமான விவிஐபிக்கள், நடிகர் நடிகைகள் வந்தனர்.

அவர்களைப் பார்த்த பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால் நடப்பது என்ன நிகழ்ச்சி, எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து உடன் நின்று படமெடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். நடிகர், நடிகைகள் அவர்கள் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாலும், அவர்களை மறித்து பக்கத்தில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டனர் அங்கு கூடியிருந்தவர்கள். இதில் சில நடிகைகள் பாடு படு மோசம். பாவம், கீழை விழுந்து எழுந்து உயிரைக் காத்துக் கொள்ள ஓடினர். அப்படியும் கூட கூட்டம் நெருக்கியடித்து படாத பாடுபடுத்தியது.
இன்னொரு பக்கம் முதல்வர் உடல் அருகில் இருந்த சில விஐபிக்கள் சிரித்த மேனிக்குப் போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
அதில் ஒருவர் கருணாஸ். முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு சில அடி தூரம் முன்பாக, ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications