அதிமுக என்ன சசிகலா குடும்ப சொத்தா? கருப்பசாமி பாண்டியன் ஆவேசம்
அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தா? என்று கேள்வி எழுப்பினார் கருப்பசாமி பாண்டியன். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையிடமிருந்து அழைப்புவந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார்.
சென்னை: சசிகலா தனது உறவுக்காரரான டி.டி.வி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்ததை சாடியுள்ளார் அக்கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கருப்பசாமி பாண்டியன் இன்று அறிவித்தார்.

இதன் பிறகு நிருபர்களிடம் பேசுகையில், என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிவிட்டு அடுத்த முடிவை அறிவிப்பேன். ஆளுநர் சசிகலாவை பதவி ஏற்க அழைப்பதற்கு தாமதப்படுத்தியது நல்லது தான். இல்லையென்றால் ஆறு நாள் முதல்வராக இருந்துவிட்டு, குற்றவாளியாக சிறை சென்றிருப்பார் என்றார் கருப்பசாமி பாண்டியன்.
அதேநேரம், புயல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்த கருப்பசாமி பாண்டியன், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையிடமிருந்து அழைப்புவந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார்.
அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தா? என்றும் கேள்வி எழுப்பினார் கருப்பசாமி பாண்டியன்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications