ஜெ.வை மறக்க முடியாத கரூர் கலெக்டர் அலுவலகம்.. ஒ.பி.எஸ்ஸின் பாஸ்போர்ட் போட்டோ கூட இல்லை!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் இன்னும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாஸ்போர்ட் சைஸ் படம் கூட வைக்காமல் உள்ளனர். அதேசமயம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்தை பத்திரிகையாளர்கள் தன்னோடு சேர்த்து போட்டோ எடுத்து விடக் கூடாது என்பதற்காக இருக்கைகளையே மாற்றிப் போட்டு விட்டார் கரூர் கலெக்டர் ஜெயந்தி.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

பல நாளாகியும்

பல நாளாகியும்

முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்று நாட்களுக்கு மேலாகிவிட்டது.

ஜெயலலிதா படம் தொடர்கிறது

ஜெயலலிதா படம் தொடர்கிறது

ஆனால் கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் இன்னமும் ஜெயலலிதா தான் முதல்வராக இருப்பதாக அவரது படங்கள் தான் அனைத்து அலுவலகங்களிலும் உள்ளது.

கரூர் களேபரம்

கரூர் களேபரம்

கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கிராம குடிநீர் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெ. படம் ஓடுகிறது

ஜெ. படம் ஓடுகிறது

அதில் ஜெயலலிதா படம் உள்ளது. அதன் அருகில் அரசின் சாதனை விளக்க படவிளக்க காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதிலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த படங்களை ஓட விடுகின்றனர்.

104 மருத்துவ சேவை

104 மருத்துவ சேவை

104 மருத்துவ சேவை பேனர், மருத்துவக்காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்யும் கவுன்டர் என அனைத்திலும் ஜெயலலிதா படங்களை வைத்திருக்கின்றனர்.

சீட்டை மாத்துங்கப்பா

சீட்டை மாத்துங்கப்பா

மேலும் மாவட்ட ஆட்சியா் அறையில் மாவட்ட ஆட்சியர் இருக்கும் நாற்காலி மேல் புறம் உள்ளது. இந்த நிலையில் இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியா் அறையில் ஜெயலலிதா படம் மாவட்ட ஆட்சியா் நாற்காலி மேலே இருந்ததால் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியினா் எடுக்கும் புகைப்படங்களில் முன்னாள் முதல்வா் படங்கள் தெரியாமல் இருக்க உடனடியாக தனது இருக்கைகளை உதவியாளா்கள் மூலம் மாற்றி அமைத்துக்கொண்டார் கலெக்டர் ஜெயந்தி.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒரு படம் கூட இல்லையே

ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒரு படம் கூட இல்லையே

பின்னா் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றன. பதவியேற்ற நாளிலிருந்து இதுவரைக்கு தமிழக முதல்வா் ஓ. பன்னீர்செல்வம் படம் மற்றும் முதல்வராக பதவி ஏற்ற புகைப்படம் கூட இடம் பெறவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+