வரலாறு காணாத அளவில் சிக்கிய பணம்.... கரூர் மாவட்டத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது தேர்தல் ஆணையம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் விதிமீறல் மிக அதிமாக இருப்பதால், கரூர் மாவட்டத்தை தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது: இந்தியாவிலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில்தான் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரூரை சேர்ந்த அன்புநாதன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்துள்ளோம். இதுபோல பல ஆவணங்களும் இம்மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற அத்துமீறல்கள் காரணமாக கரூர் மாவட்டத்தை தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு குறித்த தகவல் நாளை தெரிவிக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications