துணைத் தலைவரைக் காணவில்லை.. கண்டுபிடித்துக் கொடுங்கள்.. இப்படிக்கு அண்ணனின் அடி விழுதுகள்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் நகராட்சியின் துணைத் தலைவரை கடந்த 6 கூட்டமாக காணவில்லை என்று கூறி விநியோகிக்கப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது.

Karur opposition councillors protest against ADMK

கரூர் நகராட்சியின் 2015-16 ற்கான வரவு செலவு திட்ட அறிக்கைக்கான பட்ஜெட் கூட்டம் கரூர் நகர்மன்ற தலைவர் அதிமுகவை சார்ந்த தமிழ்நாடு செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கரூர் நகராட்சியின் கூட்ட அரங்க வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிர்கட்சிகளான திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்த ஒரு வித அழைப்பும் விடுக்காமல் அதிமுகவினரே கூட்டத்தை நடத்துவதாக சர்ச்சை வெடித்தது.

Karur opposition councillors protest against ADMK

எதிர்கட்சி என்ற கோணத்தில் தங்களது வார்டிற்கு எந்த வித வசதிகளையும் கரூர் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை எனக்கூறி எதிர்கட்சி கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மதிமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தி, தேமுதிக கவுன்சிலர்கள் ஜமுனா தங்கவேலு, நாகராஜன், தி.மு.க கவுன்சிலர்கள் நாராயணன், ரவிக்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் ஜெகதீஷ் உள்ளிட்டவர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

Karur opposition councillors protest against ADMK

மேலும் கரூர் நகர்மன்ற துணை தலைவரான காளியப்பனை காணவில்லை எனக் கூறியதோடு கண்டுபிடித்து தருமாறும் கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு என்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸில் பொதுமக்களே எங்களது ஆருயிர் நண்பரும் கரூர் நகர்மன்ற துணை தலைவருமான உரக்கடை காளியப்பனை கடந்த ஆறு கூட்டத்தொடரில் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள். இப்படிக்கு அண்ணனின் ஆரூயிர் விழுதுகள் - கரூர் நகராட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களையும் விநியோகித்தனர்.

Karur opposition councillors protest against ADMK

அசிங்கமாகப் பேசும் முத்துச்சாமி

கரூர் நகர்மன்றத்திற்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை என்று புலம்பிய ம.தி.மு.க கவுன்சிலர் சத்தியமூர்த்தி எந்த கேள்வி கேட்டாலும் அ.தி.மு.க வில் இருக்கும் கவுன்சிலர் பன்னீர் எ முத்துச்சாமி கேவலமாகவும், அசிங்கமாகவும் எதிர்கட்சியினரை பார்த்து பதில் சொல்கிறார். இந்நிலை நீடித்தால் கரூர் நகராட்சியை கண்டித்தும், அ.தி.மு.க கவுன்சிலர் பன்னீர் (எ) முத்துசாமியை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாகவும் ம.தி.மு.க கவுன்சிலர் எச்சரிக்கை விடுத்தார். இதலால் பெரும்பரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+