அணிவகுத்த குட்டி விவேகானந்தர்கள்.. கரூர் பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
கரூர்: கரூர், பரணிபார்க் கல்விக் குழுமத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பரணிபார்க் கல்விக் குழுமங்களின் சார்பில் கல்விக் குழும வளாகத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "விவேகானந்தாதான் ஆன்மீக சாதனைகள் குறித்தும், விவேகானந்தாதான் தேசபக்தி, தெய்வபக்தி கருத்துக்கள் பாரத தேசத்தின் உயர்வுக்கு அடித்தளம் அமைத்தது குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வழிகாட்டிய மாமேதையான விவேகானந்தாதான் வழிநின்று மாணவர்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார்.
விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விவேகானந்தர் போன்று மாறுவேடமணிந்து வந்திருந்தனர். மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பரணிபார்க் பள்ளியின் முதல்வர் க.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணிவித்யாலயா பள்ளியின் முதல்வர் சு.சுதாதேவி நன்றியுரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் மு.சுரேஷ் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் செய்திருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications