கரூர் பள்ளி, கல்லூரியில் கலக்கலான பொங்கல் கொண்டாட்டம்!
கரூர்: கரூர், பரணிபார்க் கல்விக் குழுமங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமங்களின் சேர்மன் எம்.குமாரசாமி தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக் குழுமங்களின் தாளாளர் சா.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தனர்.

பரணிபார்க் கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணின் பேசுகையில், "தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரத்தை பறைசாற்றும் பொங்கல் திருநாள் ஒவ்வோரு வருடமும் பரணிபார்க் கல்விக் குழுமங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரணிபார்க் கல்விக் குழும ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். மேலும் பரணி பார்க் பள்ளி, பரணி வித்யாலயா பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து மொத்தம் 23 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், சூரிய பகவானுக்கும் படைக்கபட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
பொங்கல் விழாவின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பானை உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பரணிபார்க் பள்ளி முதல்வர் க.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சு.சுதாதேவி நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் மு.சுரேஷ், முதல்வர்கள், துணை முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications