கரூரில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – பக்தர்கள் அதிர்ச்சி
கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரத்தில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீபகவதியம்மன் ஆகிய அம்மன்கள் ஓரே கருவறையில் உள்ள அபூர்வ கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், அருகில் இருக்கும் பிடாரி அம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது, அதிகாலை நேரமானதால் அப்பகுதியில் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல்களை பாடியவாறு கோவிலுக்கு வந்தனர்.

இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த இரண்டு கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications