7 கிலோமீட்டர் நடை… 4 மணிநேரம் பேருந்து பயணம் செய்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
ஈரோடு: வாக்குப்பதிவு நாளன்று கத்திரிமலை மக்கள் 88 கி.மீ தூரம் பயணம் செய்து வாக்களித்து ஜனநாயகக்கடமையாற்றியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் உள்ளது கத்திரிமலை. அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த மலைவாழ் மக்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வருவாய் கிராமத்தில் இந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருந்தாலும், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கோவிந்தபாடி வழியாகத்தான் இந்த ஊர் மக்கள் வெளியுலக தொடர்பு வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து கத்திரிமலை அடிவாரத்தில் உள்ள கத்திரிப்பட்டி என்ற ஊருக்கு தனியாக நகரப்பெருந்தும் இயக்கப்படுகிறது. மற்ற எல்லா தொடர்புகளும் சேலம் மாவட்டத்துடன் இருந்தாலும், இவர்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடி பர்கூரை அடுத்துள்ள துருசனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.
கத்திரிமலை வாக்காளர்கள் தங்கள் கிராமத்திலிருந்து அடர்ந்த மலைப்பாதை வழியாக வாக்குச்சாவடிக்கு சோளகரனை வழியாக நடந்து சுமார் 20 கி.மி தூரம் செல்ல வேண்டும்.
இல்லையெனில், செங்குத்தான மலைப் பாதையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் இறங்கி, சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பெரியதண்டா லக்கம்பட்டிக்கு வந்து அங்கிருந்து கொளத்தூர், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், அந்தியூர் வழியாக பர்கூரை அடுத்த துருசனம்பாளையம் செல்ல வேண்டும்.
வாக்களிப்பதைக் காட்டிலும், வாக்குப்பதிவு மையத்துக்குச் செல்வது இக்கிராம மக்களுக்கு மிகச் சிரமமான காரியம். இதனால், இந்த கிராம மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கவே செல்லமாட்டார்கள்.
இதனையறிந்த, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மதுமதி, கத்திரிமலை மக்கள் வாக்களிக்க ஏதுவாக பேருந்து ஏற்பாடு செய்துகொடுக்க அதிகரிகளுக்கு சிறப்பு அனுமதி கொடுத்தார்.
அதன்படி, கத்திரிமலை அடிவாரமான லக்கம்பட்டிக்கு சென்று அங்கிருந்த வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்து துருசனம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் மலைப்பாதையில் இறங்கவோ, ஏறவோ இவர்களால் முடியாது. இதனால், நடக்கும் திறனுடைய வாக்காளர்கள் 72 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். இதற்கு முன்னதாகவே, கத்திரிமலையிலிருந்து பர்கூரில் உள்ள தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு துருசனம்பாளையம் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் 30 பேர் அங்கே தங்களது ஜனநாயக கடமையான வாக்கைச் செலுத்தினர்.
தங்களின் வாழ் விடத்திலிருந்து, 7 கி.மீ. தொலைவு கீழே இறங்கி, 4 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியுள்ளனர் கத்திரிமலை மக்கள். இந்த மக்கள் தாங்கள் வாக்களிக்க வந்து சென்ற மொத்த தொலைவு 88 கி.மீ ஆகும்.
சல்யூட்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications