பெத்த குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு தள்ளிய கந்து வட்டியின் கொடூரம்!
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமல் பெற்றோரே பிள்ளைகளுக்கும் தீ வைத்து தாங்களும் தீக்குளித்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Recommended Video

சென்னை : நெல்லையில் தாய் தந்தையரே கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் பெற்ற பிள்ளைகளுக்கு உடலில் தீ வைத்து கொளுத்திவிட்டு தாங்களும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் தமிழக மக்களின் மனங்களை கனமாக்கியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமைக்கு 6 முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மனமுடைந்த இசக்கி முத்து, தன்னுடைய மனைவி, பிள்ளைகள் 2 பேர் மீது தீ வைத்துள்ளார். ஒரு லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியதற்கு லட்சத்து 45 ஆயிரம் வரை திருப்பிக் கொடுத்தும் கந்துவட்டி கொடுமை தீரவில்லை.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதோடு போலீசார் இசக்கி முத்துவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இசக்கி முத்து நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த போது கையில் வைத்திருந்த பையில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம்
ஆனால் இதில் கொடுமையான விஷயமாக பார்க்கப்படுவது, இசக்கி முத்துவே தன்னுடைய பிள்ளைகள் மேல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். சிறு காயம் என்றாலே அலறும் பிஞ்சுகள் தந்தையே தீ வைக்கும் அந்த தருணத்தில் எந்த மனநிலையில் இருந்திருக்கும். உடலில் நெருப்போடு ஓடி வந்த அந்தக் குழந்தைகளின் காட்சி இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்பதற்கு ஆளே இல்லையா என்பதை கேட்பதாக இருந்தது.

இயலாமையின் வெளிப்பாடு
என்ன தான் பெற்றோருக்கு கந்தவட்டி கொடுமையால் வெறுப்பு, இயலாமை, கோபம் இருந்தாலும் அதை இப்படியா குழந்தைகள் மீது காட்டுவது என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆசை ஆசையாய் பெற்றெடுத்த இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி தீக்காயத்தின் வீரியம் தாங்காமல் உயிரை விட்டுவிட்டனர். இசக்கி முத்து மட்டும் உயிருக்கு போராடி வருகிறார்.

நடவடிக்கை ஏன் இல்லை?
6 முறை மனு கொடுத்து போராடிய இசக்கிமுத்துவிற்கு நம்பிக்கை அளிக்காதது யாருடைய குற்றம். வாழ்வாதாரத்திற்கே போராடும் மக்களிடம் இருந்து கந்துவட்டி என்ற பெயரில் பணத்தை பிடுங்கித் தின்னும் பெருச்சாலிகளுக்கு உதவும் அதிகார வர்க்கம் ஏன் ஏழைகளின் துயரை துடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

விழிக்குமா அரசு
தன்னுடைய குடும்பத்தினரை காவு கொடுத்து நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் கந்துவட்டி அவலங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இசக்கிமுத்து. இனி இதுபோன்றதொரு தீக்குளிப்பு சம்பவம் நடக்காமல் இருக்க அரசும், அதிகாரிகளும் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications