காவேரி மருத்துவமனையிலிருந்து நல்ல செய்திக்காக தொண்டர்கள் காத்திருப்பு

கருணாநிதி உடல்நிலை குறித்து இரவு 10 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடவுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தங்கள் தலைவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள்

    சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்த அடுத்த அறிக்கை எப்போது வெளியாகும் என்று தொண்டர்கள் காத்து கிடக்கின்றனர்.

    கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கருணாநிதியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளதாக மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Kauvery hospital will release one more statement at 10pm

    இதையடுத்து மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து திமுக எம்பிக்கள் வருகின்றனர். இத்தனை நாட்கள் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்படும் போதெல்லாம் அழைத்து வரப்படாத தயாளு அம்மாள் இன்று அழைத்து வரப்பட்டார்.

    இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் வேறு கருணாநிதி உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் அதிக அளவில் குவிகின்றனர். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் மருத்துவர்கள் கொடுக்கப்படும் சிகிச்சையை கருணாநிதியின் உடல் ஏற்றுக் கொண்டு அதன் மூலம் முன்னேற்றம் அடைந்தால் அதை மீண்டும் இன்னொரு அறிக்கையாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி இன்னொரு அறிக்கையை மருத்துவமனை சொல்லக்காரணம், தொண்டர்கள் பதட்டத்தில் இருப்பதால் அவர்களை சாந்தப்படுத்த மற்றொரு அறிக்கை எப்போது வெளியாகும் என்று தொண்டர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.

    இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு ஒரு அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிடும் என்று கூறப்பட்டது. எனினும் அவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிடப்படாததால் நாளை பிற்பகல் அல்லது மாலையில் ஏதேனும் அறிக்கை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+