கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் நாளை பொங்கல் விழா
கென்டக்கி: அமெரிக்காவில் உள்ள கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 16ம் தேதியன்று மிகவும் இனிதாக கொண்டாடப்பட இருக்கிறது.
கொரோனவின் காரணத்தினால் இந்த நிகழ்ச்சி நிகழ்நிலை வாயிலாக நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு இவ்விழா துவங்க உள்ளது.

பலகுரல் மன்னன் டிவி புகழ் ஆதவன் விழாவை தொகுத்து வழங்க உள்ளார். இந்த விழாவில் குழந்தைகளும் பெரியவர்களும் ஆடல் பாடல்களை வழங்கி மெருகேற்ற இருக்கிறார்கள். அனைவரும் விழாவை நிகழ்நிலை வாயிலாக கண்டு களிக்குமாறு கென்டக்கி தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளனர்.
எண்ணங்கள் எழுச்சியுடன், மனதில் மகிழ்ச்சியுடன் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழர் திருநாள் நிகழ்வு இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியானது கென்டக்கி தமிழ்ச் சங்கத்தின் யூட்யூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications