• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளத்தினர் கொட்டும் கழிவுகள்.. வெறி கொண்டு திரியும் நாய்கள்.. 2 பேர் பலி!

|

புளியரை: தமிழக, கேரள எல்லைப் பகுதியான புளியரையில் கேரள மாநிலத்தவர்கள், தங்களது மாநிலக் கழிவுகளை தொடர்ந்து கொட்டிக் குவித்து குப்பை மேடாக்கி வருகின்றனர். இதனால் அங்கு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் வெறிநாய் கடித்த வீட்டு நாய் கடித்து 2 பேர் பலியாகியுள்ளனர்.

புளியரை வழியாக கேரளாவுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சரக்குகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. அம்மாநிலத்தில் கழிவுகளை சாலைகள் உள்ளிட்ட எங்கேயும் கொட்ட அனுமதி கிடையாது. கொட்டினால் 2 ஆயிரம் முதல் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள கழிவுகளை இங்கிருந்து போகும் சரக்கு வாகனங்கள் சரக்குகளை இறக்கிவிட்டு காலியாக வருவது வழக்கம்.அங்குள்ள கழிவுகளை காசுக்கு ஆசைப்பட்டு இவர்கள் ஏற்றிவந்து தமிழக பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை சமயங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

இந்த கழிவுகளில் கோழிக் கழிவுகள் இன்னும் பிறகழிவுகளும் அடக்கம். இப்பகுதிகளில் கொட்டப்பட்ட கழிவுகளை இப்பகுதி நாய்கள் சாப்பிட்டு சாலைகளில் கூட்டம், கூட்டமாக அலைகின்றன. காண்போரையும் விரட்டுவதாலும், கடிப்பதாலும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வூரின் அருகிலுள்ள பகவதிப்புரம் கிராமத்தில் கருப்பசாமி கோவில் தெருவைச் சார்ந்தவர் சுப்ரமணியன். இவர் தனது வீட்டுக்கு சுமார் 2ஆண்டுகளுக்குமுன் "பொமரியன்" வகையை சார்ந்த ஒருநாயை ரூபாய் ஆயிரம் கொடுத்து வாங்கி வளர்த்துள்ளார். இந்த நாய் வீட்டிலிருந்து அடிக்கடி ரோட்டுக்கு வந்துவிடுமாம். இந்நிலையில் இந்த நாய்க்குட்டியை தெருநாய் ஓன்று கடித்துள்ளது. அது சுப்ரமணியன் குடும்பத்திற்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் ஒருநாள் இவரை வீட்டு நாய் கடித்துள்ளது. நம்ம நாய்தானே என்று அவர் கவனிக்காமல் இருந்துவிட்டார். அதே போல் இவரது மனைவி மீனாவையும் கடித்துள்ளது. அவரும் வீட்டு நாய்தானே கடித்தால் கடித்து வி்ட்டுப் போகட்டு், என்று இருந்துவிட்டார். இந்நிலையில் கணவன் ,மனைவி இருவருக்குமே திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்படவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Kerala garbage makes TN dogs to bite humans

அங்கிருந்த டாக்டர்கள், அவர்களை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21.06.14.அன்று சுப்ரமணியன் இறந்துள்ளார். அதன் பின் அவரது மனைவி மீனா கடந்த 11.07.14.அன்று பரிதாபமாக இறந்துள்ளார். இந்நிலையில் இவர்களது மகன் ஐயப்பன், மகள் ரேவதி ஆகியோரையும் கடிக்கவே அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போது அந்த நாய் இறந்து விட்டது. இதையடுத்துதான் அதை வெறிநாய் கடித்த விவரம் தெரிய வந்தது. கேரளத்து கழிவுகளால் நாய்கள் அதிகரித்திருப்பதும், வெறி பிடித்த நாய்களால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவதும் மக்களை கோபத்தில் மூழ்கடித்துள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The piling of Kerala garbage in the border town of Puliyarai has become a big menace to the local people as hundreds of dogs are roaming in the locality. 2 persons have died of dog bite here.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more