பொன்னார், தமிழிசையைப் பார்த்து கேரளா நம்பூதிதிரிகள் அதிர்ச்சி - திருநாவுக்கரசர் கிண்டல்
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்னாரைப் பார்த்து கேரளா நம்பூதிரிகளே அதிர்ச்சியடைகின்றனர் என்று திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.
சென்னை: தமிழிசை சவுந்தரராஜனும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சொல்லும் ஜோசியம் உடனே பலிப்பதால் அதைப் பார்த்து கேரள நம்பூதிரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசினார். பாஜகவை கடுமையாக சாடினார்.

வெற்றிக்கூட்டம் மாறிவிட்டது
இந்த இடத்தில் தி.மு.க. வெற்றிக் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் மூலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் வைத்தாலும், தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி அடையும்.

நிரந்தர ஆளுநர்
தமிழகம் மிகப் பெரிய மாநிலம். அதற்கு ஒரு நிரந்தர ஆளுநரை நியமிக்க, மத்திய அரசுக்கு துப்பில்லை. தி.மு.க சார்பில் மும்பை சென்றுதான், கவர்னரைப் பார்த்து புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகி இருக்கலாம் என நினைக்கிறேன். மூன்று பேர் போய் வரவே இவ்வளவு செலவு ஆகிறது என்றால், சாதாரண மக்களால் மும்பை சென்று கவர்னரைப் பார்த்து வர முடியுமா? இதற்கெல்லாம் அக்கறை எடுக்காமல், இடைத்தேர்லை நிறுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாஜக முயற்சி
தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக வந்து பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்கள் பன்னீர்செல்வம், தீபா மூலம் வெற்றி பெற நினைத்தனர். ஆனால், அதற்குள் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. பாஜகவினர் நினைப்பது தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது.

பெரிய ஜோக்
பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதே மிகப்பெரிய ஜோக். ஆனால், அவர்கள் நினைப்பது எல்லாம் தமிழகத்தில் நடக்கிறது. அதுதான் ஆச்சரியம். அதிமுகவை இல்லாமல் ஆக்குவோம் என்றார்கள். அப்படி செய்து விட்டார்கள். கட்சியை இரண்டாக உடைத்து விட்டார்கள் என்றார்.

கேரளா நம்பூதிரிகள்
இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றார்கள். இடைத்தேர்தலை ரத்தாகும் என்றார்கள் அதுவும் நடந்து விட்டது. இப்படி தமிழிசையும், பொன்னாரும், நடக்கப் போவதை முன் கூட்டியே சொன்னார்கள். இப்படி இவர்கள் சொல்வது எல்லாம் பலித்து விடுவதால் பொன்னார், தமிழிசையைப் பார்த்து ஜோதிடர்கள், கேரள நம்பூதிரிகள் எல்லோரும் தங்கள் தொழிலுக்கு போட்டி வந்துவிட்டதாக பயந்துபோயிருக்கிறார்கள் என்று திருநாவுக்கரசர் நக்கலாக கூற கைத்தட்டலும் விசிலும் பறந்தது.

பாஜகவே காரணம்
அதிமுகவை உடைத்து, சின்னத்தை முடக்கியதோடு ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்ததும் பாஜக தான் என்று குற்றம் சாட்டிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications