பெண்களின் கற்பு குறித்து அவதூறு.. குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு!
பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர்: பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றார். ஆனால் உறவில் ஈடுபடும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.என்று கூறியிருந்தார்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.
மேட்டூர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 2005ஆம் ஆண்டு குஷ்பு ஆஜரானார். ஆனால் அதன்பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களின் கற்பு குறித்து அவதூறு பேசிய வழக்கில் குஷ்புவை 15 நாட்களில் ஆஜர்படுத்த மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் கற்பு குறித்த குஷ்புவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications