நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம்: குஷ்பு
சென்னை: ரூ500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அதிரடியாக ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பும், அதே நேரம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது கருப்பு பணம் என்றும், அதனை வேறோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
'இந்த திட்டத்தினை 4 மாதங்களாக மிகவும் ரகசியமாக செய்து வந்ததற்காக முதலில் பிரதமர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும்','இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் கருப்பு பணம் வைத்திருக்கும் பலரும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர், ஏனெனில் அப்பணம் இப்போதைக்கு வெற்றுக் காகிதம் ஆகியிருக்கும் என்றும், பலரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த அப்பணத்தை அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பர்' என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications