நல்ல வேளை ஜெ. தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கவில்லை, இல்லைனா அதுக்கும் 'ஸ்டிக்கர்' தான்: குஷ்பு
திருச்சி: நல்ல காலம் ஜெயலலிதா தமிழ்த்தாய் சிலையை நிறுவவில்லை. இல்லையென்றால் அதன் நெற்றியிலும் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ஜெரோமுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
அதிமுக ஆட்சியில் எந்த துறையும் முன்னேற்றம் அடையவில்லை. இதற்கு ஜெயலலிதா தான் காரணம். தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. அதிக ஊழல் செய்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்கள் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு தான். ஊழல் செய்தவர்கள் பலர் தனது கட்சியினர் என தெரிந்தும் ஜெயலலிதா அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தாய் சிலை
ஜெயலலிதா அறிவித்தபடி தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கவில்லை. ஒரு வேளை சிலை வைத்திருந்தால் அதன் நெற்றியில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி, கையில் இரட்டை இலையை வைத்திருப்பார்கள் அதிமுகவினர்.

ஏமாற்றம்
2011ம் ஆண்டில் மாற்றத்தை எதிர்பார்த்து அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஜெயலலிதா தான் போட்டியிடும் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது அங்கு மின்தடை ஏற்பட்டது.

மின்மிகை மாநிலம்
தமிழகத்தில் மின்வெட்டே இல்லை. தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டது என்று கூறும் ஜெயலலிதாவின் தொகுதியிலேயே மின்வெட்டு ஏற்படுவது வேடிக்கையாக உள்ளது. மின்துறை அமைச்சர் ரூ.575 கோடி ஊழல் செய்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications