வெனிஸ் நகரத்தில் குஷ்பு... அக்னி வெயிலில் தமிழக தலைவர்களை சந்திக்கும் நக்மா!
தமிழகத்தில் அக்னி வெயில் பட்டையை கிளப்ப நடிகை குஷ்பு வெளிநாடு டூரில் இருக்கிறார். நடிகை நக்மாவோ தமிழக அரசியலில் பட்டையை கிளப்புகிறார்.
சென்னை: தமிழக அரசியல் களம் எத்தனையோ நடிகைகளைக் கண்டுள்ளது. இப்போது புது வரவாக ஆக்டிவாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து தமிழக அரசியலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை நக்மா.
குஷ்பு வெளிநாடு சென்றுள்ள நேரமாக பார்த்து சென்னையில் டேரா போட்டுள்ள நக்மா தினசரியும் ஏதாவது காரணத்திற்காக ஊடகங்களில் பேட்டி கொடுத்து விடுகிறார்.
தென் சென்னையை குறிவைத்து இவர் நகர்த்தும் காய், குஷ்புவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.
|
வெனிஸ் நகரத்தில் குஷ்பு
கோடை வெயில் பட்டையை கிளப்ப குடும்பதோடு ரோம் கிளம்பி விட்டார் குஷ்பு. அங்கே குடும்பத்தோடு விடுமுறையை கழிக்கும் அவர், தினசரி ஒவ்வொரு போட்டோவாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அக்னி வெயிலில் நக்மா
தமிழகத்தில் அக்னி வெயில் பட்டையை கிளப்ப அசராமல் வலம் வருகிறார் நக்மா. ரஜினி, ஸ்டாலின் என்று தினசரியும் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். சத்யமூர்த்தி பவனுக்கு வந்து மகளிர் அணியினருடன் பேசுகிறார்.

போராட்ட களத்தில்
பிரதமர் மோடிக்கு எதிராக எதையாவது கூறி பரபரப்பை ஏற்படுத்தும் குஷ்பு, இப்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். இங்கே நக்மாவே கடந்த 2 வாரகாலமாகவே டேரா போட்டு தமிழக அரசியலில் உற்சாகமாக பங்கேற்று பேட்டி கொடுத்து வருகிறார். குறிப்பாக மோடிக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

ஊடகங்களில் உற்சாக பேட்டி
தினசரியும் அரசியல் தலைவர்களை சந்திக்கும் நக்மா ஊடகங்களில் உற்சாகமாக பேட்டி தருகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு இரண்டு பேரும் சண்டை போடுறாங்க, மக்களைப் பற்றி நினைப்பதில்லை என்று கூறி அசரடிக்கிறார் நக்மா.

நக்மா அணி
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வரும் நக்மா, தனக்கு ஆதரவாளராக உள்ளவரை மாநில மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். இதற்காகவே வளையல் அனுப்பும் போராட்டத்தையும் அறிவித்தாராம்.

மகளிர் அணியில் மாற்றம்
அகில இந்திய மகளிர் செயலராக உள்ள ஹசீனா சையது, மாநில நிர்வாகிகள் மைதிலி, ஆலீஸ் மனோகரி உள்ளிட்டோர் மாநில மகளிர் அணி பொறுப்பை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர். விரைவில் மகளிர் அணியில் மாற்றம் வரும் என்றும் தெரிகிறது.

தென் சென்னைக்கு குறி
குஷ்பு வெளிநாடு சென்றுள்ள நேரமாக பார்த்து சென்னையில் டேரா போட்டுள்ள நக்மா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தென் சென்னை தொகுதியை குறி வைத்துள்ளதாகவும் இதற்காகவே இங்கே தலைவர்களை சந்திப்பு, ஊடகங்களில் பேட்டி, போராட்ட அறிவிப்பு என உற்சாகமாக வலம் வருகிறார். வெளிநாட்டில் இருந்து குஷ்பு வந்த பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்ட் இருக்கும் என்றே தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications