மேட்டூர் பஸ்ஸ்டாண்டில் போதையில் உருண்ட தந்தை: பசியில் கதறிய குழந்தைகள்
மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில், லாரி ஓட்டுனர், ஒருவர் குழந்தைகளை பசியால் தவிக்க விட்டு விட்டு குடிபோதையில் உருண்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையின் நிலையை பார்த்தும், பசி வயிற்றைக் கிள்ள குழந்தைகள் இருவரும் கதறித் துடித்ததைப் பார்த்து பொதுமக்களை வேதனைப்பட்டனர்.
குடிகார தந்தையின் பெயர் முருகன், 30. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, பண்ணவாடி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இவர் லாரி ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தம்பதியருக்கு, தனஸ்ரீ, 4 என்ற மகளும், அழகிரி, 2, என்ற மகனும் உள்ளனர்.
முருகன் தினசரி, மது அருந்திவிட்டு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.இதனால், சில நாட்களுக்கு முன், கவிதா வீட்டில் கோபித்துக்கொண்டு, பவானி அடுத்த சுண்டாட்டம்பாளையத்திலுள்ள, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், முருகன், தன் குழந்தைகளை மட்டும் அழைத்து, தன் வீட்டுக்கு வந்தார்.
ஆடிப்பெருக்கு பண்டிகை முடிந்த நிலையில், இரு குழந்தைகளையும், மனைவியிடம் விட முடிவு செய்த முருகன், மனைவி ஊருக்கு செல்ல தன் குழந்தைகளுடன், பேருந்தில் மேட்டூர் வந்தார். அப்போதும் போதையில் இருந்த முருகன், தடுமாறிய நிலையிலேயே பேருந்தில் இருந்து இறங்கினார். கீழே தடுமாறி விழுந்து உருண்டு புரண்ட அவர் சிறிது நேரத்தில் போதையில் மயங்கிவிட்டார். பிஞ்சு குழந்தைகள்தான் பாவம் செய்வதறியாது தவித்தனர், பசியால் கதறி துடித்தனர்.
குழந்தைகள், பசியால் கண்ணீர் விட்டு அழுதது பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மனதை கரைய செய்வதாக இருந்தது. பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிலர், முருகன் தலையில் தண்ணீரை ஊற்றி போதையை தெளிய வைத்தனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மயக்கம் தெளிந்தது. அவரை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் பசியை போக்கி, இருவரையும் மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், இரண்டு மணி நேரத்துக்கு பின் வந்து, காவல் நிலையத்திற்கு வந்து முருகனையும், குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications