அரிசி தர மாட்டேன் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்று கிரண் பேடி பல்டி!
சுத்தமான கிராமங்களுக்குதான் இலவச அரிசி என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி திரும்பப் பெற்றார். கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், உத்தரவை அவர் திரும்பப் பெற்றார்.
புதுச்சேரி: சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2016 மே மாதம் கிரண்பேடி பொறுப்பேற்றார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியின் இந்த நியமனம் பெரும் வரவேற்பை பெற்றது. திஹார் ஜெயிலில் சீர்திருத்தம் கொண்டு வந்ததுபோல், புதுச்சேரியிலும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

திடீரென்று ஆய்வு செய்வது என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திக்குமுக்காட வைத்தார் கிரண்பேடி. அந்த வரிசையில் கிராமங்களில் தூய்மைப் பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய கெடுபிடியை ஆளுநர் கிரண்பேடி கொண்டு வந்தார்.
சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று கிரண்பேடி உத்தரவிட்டார். சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். அதையடுத்து, சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை, புது்சசேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications