பள்ளிக்கு லேட்டாய் வந்த 7 ஆசிரியர்கள் – நோட்டீஸ் கொடுத்த பள்ளிக் கல்வி இயக்குனர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளிக்குத் தாமதமாக வந்த 7 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளிக் கல்வித்துறையினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க சென்னையிலிருந்து வந்த பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அதிரடியாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 7 ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிக்குத் தாமதமாக வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி தாமதமாக வந்த 7 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து காலதாமதமாக வந்த ஆசிரிய, ஆசிரியைகள் அதற்கான விளக்கக் கடிதம் எழுதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கினர். இவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications