For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிச்சயம் தொடங்கும்- அடித்து சொல்கிறார் அமைச்சர் மாஃபா

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தொடரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

Kizhadi evacuation process will continue: Minister Mafoi Pandiyarajan

இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன. கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இவை கடந்த 30-ஆம் தேதி முடிவடைந்தன.

எனினும் அங்கிருந்து தொல்லியல் தொடர்பான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கீழடியில் மூன்றாவது கட்ட ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மத்திய அரசின் இணைந்து தொடரும். அகழ்வாய்வு செய்யும் இடங்கள் எதுவும் ஒப்படைக்கும் பணிகள் நடைபெறவில்லை. கீழடி அகழாய்வு பணிகளை மறைப்பதாக நச்சு கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றார் அமைச்சர்.

English summary
Minister Mafoi Pandiyarajan says that Kizhadi evacuation process will continue with Central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X