ஸ்டாலினை முதல்வராக்க திமுக தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும்: கே.என்.நேரு வேண்டுகோள்
ஸ்டாலினை முதல்வராக்க தொண்டர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி : விரைவில் வரவிருக்கும் தேர்தலில் தீவிர களப்பணியாற்றி திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் திருச்சியில் நடந்த மாநகர செயற்குழுவில் கே.என். நேரு தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், வரவிருக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் மக்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செயல்பட முடியும் என்பது பற்றி விரிவாகப் பேசினார்.
ஒவ்வொரு பொறுப்புகளிலும் போட்டியிட தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி விளக்கிக் கூறியும், அதற்கான சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வெற்றிக்கு படிக்கட்டாக இருக்கும் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
மேலும், ஈரோட்டில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு நகரம், ஒன்றியம், பேரூர் என அனைத்து பகுதிகளிலும், ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திருச்சியில் இருந்து அணிவகுத்துச் செல்ல வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இப்போதில் இருந்தே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை, மனதில் வைத்து திமுக தொண்டர்கள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்று கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications