சு. சாமி தமிழகத்தில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்-'கொங்கு' ஈஸ்வரன்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் பேசி வரும் சுப்பிரமணியம் சாமி தமிழகத்தில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுப்பிரமணியசாமியின் சமீபத்திய செயல்கள் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமானதாகவே உள்ளதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழின துரோகி
மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணிய சாமி சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் ஒட்டி உறவாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக நலன்களுக்கு எதிராகவே உள்ளன.

ராஜபக்சேவுக்கு வால் பிடிக்கிறார்
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பறிமுதல் செய்யச் சொன்னேன் என்று கூறினார். இப்போது இலங்கையில் தமிழர்ளை கொன்று குவித்தற்காக ராஜபக்சேவுக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது உச்சக்கட்டம். இதனை பொறுத்துக் கொள்ளமுடியாது.

சீர்குலைக்க முயல்கிறார்
மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அது பலனளித்து விடக் கூடாது என்பதற்காக சுப்பிரமணியசாமி செயல்பட்டு வருகிறார்.

முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்
சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதன் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தலைமையின் முயற்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுகிறது.

தடை விதிக்க வேண்டும்
தமிழர்களுக்கு எதிராகவும் தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியசாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

மக்கள் செய்வார்கள்
தமிழக அரசு இதனை செய்யாவிட்டால் மக்களே இதனை செய்வார்கள் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications