கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
சென்னை: கோச்சடையான் பட விநியோக வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் அவரது இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் கோச்சடையான். இந்த படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தை தயாரிக்க, அதன் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டிருந்தார். சில சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதற்கான ஒப்பந்தத்தின் போது 'ஆட் பியூரோ' நிறுவனத்துக்கு 'கோச்சடையான்' திரைப்பட உரிமையை வழங்குவதாக மீடியா ஒன் குளோபல் நிறுவன இயக்குனர் மனோகர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பட உரிமை வழங்கவில்லைஆனால் 'தங்களிடம் வாங்கிய பணத்தை லதா கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி திரைப்பட உரிமையை கொடுக்காமல் 'ஈராஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அளித்தனர்.
கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்தார். மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது நிதி மோசடி புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்ததை மீறி முரளி மனோகரும் லதா ரஜினிகாந்தும் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றுள்ளதாக ஆட் பீரோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
ஆட் பீரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று ஆட் பீரோவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வழங்கிய ஆட் பீரோ நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பிரபுலா சி பந்த் அமர்வு, வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications