ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு.. 4 பேர் அதிரடி கைது.. 5 பேர் தலைமறைவு !
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தொடர்புடையதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குன்னூர்: கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தொடர்புடையதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார்.
கடந்த 24-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிஷனிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
தீவிர வேட்டை
கோத்தகிரியில் உள்ள எஸ்டேட்டை நோக்கி வந்த சொகுசு கார்கள் குறித்து அங்குள்ள சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.
பக்கத்து இடங்களில் விசாரணை
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள பெட்ரோல் நிலயைங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் நீலகிரிக்கு அருகில் உள்ள கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வரைப்படம்
மேலும் காயமடைந்த காவலாளி கிஷன்பகதூர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டரில் வரைப்படம் வரைந்து அதை வைத்து தேடி வந்த நிலையில் நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 பேரிடம் விசாரணை
விசாரணை வளையத்தில் சிக்கிய 8 பேரில் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார், முக்கிய குற்றவாளியான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், டீபு, சந்தோஷ், சதீஷன் ஆகிய 4 பேரை கூடலூர் தேவாலா பகுதிக்கு அழைத்து வந்த போலீஸார் தொடர்ந்து 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்க பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் வயநாடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications