கோகினூர் வைரத்தை பாகிஸ்தானுக்கு திரும்ப கொண்டு வர முடியாது !
லாகூர்: கோகினூர் வைரத்தை பாகிஸ்தானுக்கு திரும்ப கொண்டு வர முடியாது என லாகூர் கோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது. அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் இங்கிலாந்து மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக வழங்கியது.

அன்றிலிருந்து இன்று வரை அந்த வைரம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. இந்த வைரத்துக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவும் உரிமை கோரி வருகிறது. மேலும் இந்தியாவுக்கு மீண்டும் இந்த வைரத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
ஆனால் அன்றைய மன்னர் ஆண்ட பகுதி தற்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே, கோகினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும் அதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஜாவித் இக்பால் ஜாப்ரி என்ற வழக்கறிஞர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று லாகூர் உயர் நீதிமன்றத்தில் தனது பதிலை சமர்ப்பித்த பஞ்சாப் மாகாண அரசு, ‘கிழக்கிந்திய கம்பெனியுடன் மகாராஜா ரஞ்சீத் சிங்கிடம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மதிப்புமிக்க கோகினூர் வைரம் வழங்கப்பட்டது. எனவே வைரத்தை திரும்ப தருமாறு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்தது.
இதையடுத்து, மகாராஜா ரஞ்சீத் சிங் - கிழக்கிந்திய கம்பெனி இடையேயான ஒப்பந்தத்தின் நகலை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட லாகூர் உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications