சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீர் உடைப்பு.. 700 வீடுகளை சூழ்ந்தது வெள்ளம்.. மக்கள் அவதி!
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.
Recommended Video

கடலூர்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. 700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
இதனால் திருச்சி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.

700 வீடுகள் பாதிப்பு
திட்டுக்காட்டூர், அக்கரை, பொரம்பட்டு, ஜெயங்கொண்டம் பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

அவசர உதவி எண் அறிவிப்பு
இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் தொடர்பான அவசர உதவிக்கு 04365 243024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications