ஜெயேந்திரர் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இரங்கல்
ஜெயேந்திரர் சரஸ்வதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காஞ்சி ஜெயேந்திரர் சரஸ்வதி மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயேந்திரர் மறைவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

காஞ்சி சங்கரமடம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய அடையாளம். வேற்று மாநிலத்தவர் மட்டுமல்ல வேற்று நாட்டவரும் விரும்பி வருகின்ற இடம். அத்தனை சிறப்பு வாய்ந்த சங்கரமடத்தின் சேவைகளில் 64 ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்தி கொண்ட மரியாதைக்குரிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீகத்தின் வாயிலாகவும், அதற்கு அப்பாற்பட்டும் செய்த பல சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் விமர்சனங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டவர். அவருடைய மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications