கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்
நெல்லை: பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. வருடாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மின் உற்பத்தி 60 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக, அணு உலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
முதற்கட்டமாக கொதிகலன் குழாயில் இருந்து நீராவியை வெளியேற்றும் பணி 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த பணியின்போது பெரிய அளவில் சத்தம் ஏற்படும். இதனால் கூடங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. பரமாரிப்பு பணிகள் பகல் நேரத்தில் மட்டும் நடத்தப்படும் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications