கோவையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் எரித்து கொலை - 4 பேர் கைது
கோவை: கோவையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை எரித்துக் கொன்றதாக நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பண்ணாரியின் மகன் சதீஷ் (29). இவர் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சதீஷ் அடிக்கடி அப்பகுதி மக்களிடையே தகராரில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனியன்று சதீஷ் செய்த தகராறால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர், அவரைப் பிடித்து அருகிலிருந்த அறையிலிருந்த அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து உடலில் தீப்பிடித்த நிலையில் அலறிய படி வெளியில் ஓடி வந்துள்ளார் சதீஷ். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் பலியானார்.
இந்நிலையில், சதீஷ் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், அவரை எரித்துக்கொன்றதாகவும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கன்னியம்மாள், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications