தனியா இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீஸ்! மற்றொருவருக்கு மாவுக்கட்டு
தூத்துக்குடி: கோவில்பட்டியில் பாலியல் வன்கொடுமையில் தேடப்பட்ட நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற மாரிசெல்வத்தை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மது போதையுடன் நள்ளிரவில் வீடு புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆய்வாளர் பிரேமா தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், மோப்பநாய் கொண்டுவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் குற்றவாளி மாரியப்பனை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற அவர் தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து மாவுக்கட்டு போட்டனர்.
வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மாரி செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவரைப் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து, அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் போலீசார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாரிச்செல்வம் மற்றும், காயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications