அதான் நான் இருக்கேன்ல.. பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய இருவர்.. தற்கொலைக்கு முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே தான் காதலித்த இருவரும் தன்னுடைய நிலையை விளையாட்டாக எடுத்துக் கொண்டதால் அதிர்ச்சி அடைந்த பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தாணு. 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பேஸ்புக்கில் சாட்டிங் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் இவருக்கு பழக்கமானார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவர் கூறியதால் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

மனைவிக்குத் தெரியாமல்

மனைவிக்குத் தெரியாமல்

ஆனால் அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதல் விவகாரம் குறிந்து அறிந்த அவரது மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் காதலியை மறக்க முடியாத அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். இது குறித்த அறிந்த தாணு பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தார்.

நான் இருக்கேன்

நான் இருக்கேன்

இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த கோவில்பட்டி செண்பகநகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாணுவிடம் என்ன ஏது என்று கேட்டுள்ளார். அதற்கு, தாணு தனது காதலன் விஷம் குடித்து விட்டதாகவும் அவர் இனி தன்னை பார்க்க மாட்டார் என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

நான் பண்ணிக்கிறேன்

நான் பண்ணிக்கிறேன்

இதில் பரிதாபப்பட்ட அந்த நபர், அதனால் என்ன நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபருக்கும் திருணமாகி ஒரு மகன் உள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அவரை அழைத்து கொண்டு கோவில்பட்டி மறவர் காலனியில் தனி வீடு எடுத்து குடியமர்த்தினார்.

புரட்டி எடுத்த மனைவி

புரட்டி எடுத்த மனைவி

இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே அவர் கணவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மறவர் காலனியில் இருந்து வாலிபர் ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனுக்கு பேசினால் எடுக்காததால் தாணு மனமுடைந்தார்.

AIADMK woman Councillor stabbed in Villupuram- Oneindia Tamil
காதல் விளையாட்டு

காதல் விளையாட்டு

இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையம் வந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை மடக்கி பிடித்த பயணிகள் அவரை போலீசில் ஓப்படைத்தனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman in Kovilpatti attempted to jump in front of the train to kill herself after her two lovers ditched her.
Please Wait while comments are loading...