போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்... வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... பொதுமக்கள் அவதி
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது.
Recommended Video

சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் போக்குவரத்து துறை ஊழியர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனை அடுத்து, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். திடீரென்று எந்த வித முன்னறிவிப்புமின்றி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், பள்ளிக்கு சென்ற குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படாததால், வழக்கமாக வெளியூரில் இருந்து வருபவர்கள், கோயம்பேடு மார்க்கெட் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என காலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமும் காலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சிறு வியாபாரிகள் பஸ் இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பூ விற்கும் பெண்கள் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications