சசிகலா தரப்பு அராஜகங்களை அதிரடியாக போட்டுடைத்த ஓபிஎஸ்க்கு கே.பி.முனுசாமி நேரில் வாழ்த்து
சசிகலாவின் குடும்பத்தினர் செய்த அராஜகங்களை மக்கள் முன் போட்டுடைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கேபி.முனுசாமி நேரில் சென்று வாழ்த்துக் கூறினார்.
சென்னை: அதிமுகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் செய்த அராஜகங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து ஏற்கனவே மன்னார்குடி கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஓபிஎஸை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்று சசிகலா கட்சியை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய திவாகரன், அதிமுகவை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கூறினார்.இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடராஜன் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக கூறினார். நடராஜனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேபி.முனுசாமி தீயசக்தி நடராஜனை வெளியேற்றுங்கள் என சசிகலாவுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் சசிகலா தரப்புக்கும் கே.பி.முனுசாமிக்கும் இடையே மோதல் வலுத்தது.
இந்நிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அராஜகங்களை அதிரடியாக போட்டுடைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications