ஓரினச்சேர்க்கை.. 3ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 8ம் வகுப்பு மாணவன்- அதிர்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி விடுதியில் ஓரினச் சேர்க்கைத் தகராறு காரணமாக 3ம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த தாசம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்று மாணவர்கள் ஏராளமானோர் அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்களன்று விடுதி குளியலையில் ரத்தகாயங்களுடன் வேலூர் மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்த தனியரசு (9) என்ற 3-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்தினர். தனியரசு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் அவரவர் வீட்டிற்கு அனுப்பப் பட்டிருந்தனர். எனவே, மாணவர்களைத் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர்.
அப்போது பெங்களூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் சக்திவேல் மட்டும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து அம்மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியரசுவைக் கொலை செய்ததை சக்திவேல் ஒப்புக் கொண்டார்.
மேலும், சக்திவேல் தனியரசுவைக் கொலை செய்தது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள விபரம் பின் வருமாறு :-
விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையாக இருந்ததால் பெங்களூர் சென்ற சக்திவேல், அங்கு நண்பர்களுடன் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான். அதிலிருந்தே ஒரு மாதிரியான எண்ணத்தில் இருந்து வந்த சக்திவேல், திங்கட்கிழமை விடுதிக்கு திரும்பியும் பள்ளி செல்லவில்லை.
அப்போது குளியலைக்கு சென்ற சக்திவேல், அங்கு குளிக்க வந்திருந்த தனியரசுவை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளான். ஆனால், தனியரசு அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த சக்திவேல் அருகிலிருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் தனியரசுவைத் தாக்கி கொலை செய்துள்ளான்.
குற்றன் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications