"கிருஷ்ணப்ரியா என்னும் நான்"... கனவை நனவாக்க கிடைத்த வருமான வரி சோதனை!
சசிகலாவின் அண்ணன் வாரிசுகள் அரசியலுக்கு வர துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் வீடுகளில் நடத்தப்பட்டிருக்கும் வருமான வரி சோதனை மூலம் கிடைத்துள்ள மீடியா வெளிச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரையே பார்த்து வளர்ந்த கிருஷ்ணப்ரியாவின் அரசியல் ஆசை இப்போது தான் அவருக்குக் கை கூடி இருக்கிறது. இதற்கான வாய்ப்பாகவே விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் வருமான வரி சோதனையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவருடனேயே இருந்தவர்கள் சசிகலாவும், அரவது அண்ணன் மனைவி இளவரசியின் குடும்பமும். இளவரசியின் கணவர் ஜெயராமன் உயிரிழக்கவே தன்னுடைய 3 குழந்தைகளுடன் போயஸ் கார்டனுக்கே வந்து பிள்ளைகளை வளர்த்தார் இளவரசி. இளவரசியின் மகள்கள் ஷகீலா, கிருஷ்ணப்ரியா, விவேக் 3 பேருமே போயஸ் கார்டனில் வளர்ந்தவர்கள் தான்.
ஜெயலலிதாவையே பார்த்து வளர்ந்த சசிகலா குடும்பத்திற்கு எப்படி அரசியல் ஆசையோ அது போலத் தான் இளவரசியின் வாரிசுகளுக்கும் அரசியல் ஆசை இருந்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே கிருஷ்ணப்ரியா சில அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். போயஸ்கார்டனில் நடந்த ஒரு உரையாடல் ஒரு அமைச்சர் மூலமாக கசிந்த விவகாரத்தில் கிருஷ்ணப்பிரியாவுக்கு "டோஸ்"விட்டார் ஜெ. அந்த பிரச்னையில் தான் போயஸ் கார்டனை விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கூடாரத்தை காலி செய்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.

களமிறங்கிய மன்னார்குடி கும்பல்
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருந்தது போல ஜெயலலிதாவின் திடீர் மரணம், சசிகலா குடும்பத்தின்ர் கட்சியை ஆட்சியையும் வளைக்க காட்டாற்று வெள்ளம் போல களமிறங்கினர். ஆனால் முற்பகல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் பிற்பகலில் இவர்களின் ஆணிவேரான சசிகலா பெங்களூர் பரபப்பன அக்ரஹாராவில் கூண்டிற்குள் நடப்பட்டு விட்டது.

என்ன செய்கிறார் கிருஷ்ணப்ரியா?
என்றாலும் அசரவில்லை இளவரசியின் வாரிசுகள், நேரடியாக சிஎம் சேருக்கே அடிபோட்டு காயை நகர்த்தி இருக்கிறார் விவேக். நானும் இருக்கிறேன் என்று தனது பங்கிற்கு அரசியல் களத்தில் மீண்டும் களமிறங்கினார் கிருஷ்ணப்ரியா. கிருஷ்ணப்ரியா அறக்கட்டளையின் அறங்காவலராகவும், Buy india.com என்ற ஆன்லைன் விற்பனையகத்தின் நிறுவனர் இயக்குனராகவும் கிருஷ்ணப்ரியா இருக்கிறார்.
2017ல் முழுவீச்சில் இறங்கிய கிருஷ்ணப்ரியா
ஜெ மறைவுக்கு முன்னர் வரை அவருடைய முகநூல் பக்கத்தில் கிருஷ்ணப்ரியாவின் சொந்த வரைகலைகளும் கருத்துகளுமே இடம்பெற்றுள்ளன. ஆனால் 2017 முழுவதும் அவருடைய முகநூல் பக்கம் புத்துயிர் பெற்று அதில் முழுக்க முழுக்க மக்கள் சேவை, போராட்டம் என்று அரசியலை குறி வைத்தே அனைத்து பதிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

மக்கள் பணியில்
மக்களின் கவனத்தை பெறுவதற்காக முதன்முதலாக சென்னையில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். கடைசியாக நவம்பர் 5ம் தேதி மகாலிங்கபுரம் பகுதியில் தன்னுடைய அறக்கட்டளையினர் மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்திய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

ஜெ. பிம்பத்தை ஏற்படுத்த
நீட் போராட்டத்தின் போது முதன்முதலில் மீடியா வெளிச்சத்திற்கு வந்த கிருஷ்ணப்ரியா தன்னுடைய கெட் அப்பையும் ஜெயலலிதா போலத் தான் தோற்றமளித்தார். அதே ஹேர்ஸ்டைல், முட்டிக்கை வரை பிளவுஸ், அதே மிடுக்கான நடை என்று அனைத்திலும் ஜெயலலிதாவை நினைவுபடுத்துகிறார் கிருஷ்ணப்ரியா. கிருஷ்ணப்ரியா முகநூலில் இது போன்ற புகைப்படங்களைப் போடும்போதெல்லாம் 'அக்கா அருமை', அப்படியே ஜெயலலிதா போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் போடவே ஒரு அடிபொடிகளின் கூட்டமும் இருக்கிறது. அதே போன்று ஜெயலலிதா மீடியாக்களிடம் பேசும்போது எப்படி தெளிவாக அழுத்தம் திருத்தமாக பேசுவாரோ அப்படியே இவரும் பேசி பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்.

மீடியா வெளிச்சம்
அரசியல் ஆசையில் இருந்த விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரனின் மகன் ஜெயானந்த் அனைவருமே ஊடகம் வெளிச்சம் கிடைக்குமா என்று காத்திருந்தனர். ஏனெனில் மன்னார்குடி வகையறா என்பதால் இவர்கள் மீதான பார்வை எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும்,எனவே வருமான வரி சோதனையை தங்களுக்கு சாதகமாக இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

செம பிளான்
5 நாட்கள் சோதனை நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல மலை முழுங்கி மகாதேவன்களாக விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் மீடியாவிடம் ஆவணங்களை சரிபார்த்தனர் சோதனைக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றனர். கிருஷ்ணப்ரியா ஒரு படி மேலே போய் சோதனை செய்வது தானே அதிகாரிகளின் வேலை அதைத் தானே செய்கிறார்கள் என்று நியாயவான் போல பேசியுள்ளார். தற்போதைய சசிகலா குடும்ப ரேஸில் அரசியலில் முக்கியத்துவம் பெறுவதில் விவேக் முதலிடம் கிருஷ்ணப்பிரியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications