ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 493 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், . ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜனிடனிடம் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் 65071 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணசாமிக்கு 64578 வாக்குகளே கிடைத்துள்ளது. இதனால் 493 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
ஏற்கனவே இதே தொகுதியில் 2 முறை போட்டியிட்டு கிருஷ்ணசாமி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இதே தொகுதியில போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் கிருஷ்ணசாமி.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications