என் வீட்டு வாடகை ரூ.16,000! எனக்கு 1 வருட வீட்டு வாடகை பாக்கி! நொந்து கொள்ளும் கேஎஸ் அழகிரி!
சென்னை: மாதம் ரூ.16,000 வாடகைக்கு சென்னையில் குடியிருந்து வரும் தனக்கு, கடந்த ஒரு வருட வீட்டு வாடகை பாக்கி உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
2 முறை எம்.எல்.ஏ., 1 முறை எம்.பி. ஆக இருந்த தன்னாலேயே மாதம் மாதம் ரூ.16,000 கட்ட முடியாத சூழலில், 4 ஆடுகள் மட்டுமே வைத்திருப்பதாக கூறி அரசியலுக்கு வந்த அண்ணாமலை மாதம் மூன்றே முக்கால் லட்சம் எப்படி வீட்டு வாடகை செலுத்துகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலைக்கு யார் பணம் கொடுப்பது என்பது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள முகநூல் பதிவு வருமாறு;
''50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் தற்போது பதவி வகிக்கிறேன்.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு நான் குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது?
மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது ? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் ? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.''












Click it and Unblock the Notifications