570 மெகாவாட் மின் உற்பத்தி: கூடங்குளம் புதிய சாதனை- தாராபூரை மிஞ்சியது
நெல்லை: "கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியது" என்று அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணு விஜய் நகரில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1000 மெகா உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு மின் கழகத்தின் அனுமதி பெற்று முதல் அணு உலையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 180 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இடையே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. படிப்படியா சோதனை ஓட்டம் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல் அணு உலையில் மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கூடங்குளம் அணுமின்நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் மின் உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்டது. அந்த மாதம் மட்டும் 425 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்டது.

750 மெகாவாட்
அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. தற்போது 750 மெகா வாட் உற்பத்தி செய்ய மின் உற்பத்தி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரித்தது. இரவு 7.30 மணி அளவில் அணு மின் நிலையத்தில் உற்பத்தி 570 மெகா வாட்டாக உயர்ந்தது. இன்னும் இரண்டு நாட்களில் 750 மெகா வாட் உற்பத்தி இலக்கை எட்டுவோம்.

இந்தியாவிலேயே அதிகம்
இது தான் இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் அணு உலையாகும். தாராப்பூரில் உள்ள அணு மின் நிலையம் 500 மெகாவாட் கொண்டது. ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அதை விட அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

50 கோடி யூனிட்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 50 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
2-வது அணு உலையில் பல் வேறு கட்டமாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications