தசரா பண்டிகைக்கு தயாராகும் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில்.. 24ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக 24ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று குலசை எனப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில். கடற்கரையில் அமைந்த மிகவும் பழமையான சக்தி தலமாகும். இந்த அம்மன் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் கருணை உள்ளம் கொண்டவள். இந்த அம்மனை வணங்கி சரணடைந்தால் போதும் நம்முடைய பிரச்சினைகள் அத்தனையும் காணாமல் போய்விடும்.

அம்மை நோய், தொழுநோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நோய்களை குணமாக்கும் தலமாகும். இங்கு 41 நாட்கள் விரதமிருந்து மாவிளக்கு பூஜை, தீச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபட்டால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
வழக்கமாக நவராத்திரி காலத்தில் வடஇந்தியாவில் தான் தசரா பண்டிகை, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நடைபெறும். அதாவது அம்பிகை, அசுரனை போரிட்டு வெற்றிக் கண்ட நாள். ஆனால் இது தமிழகத்தில் விஜயதசமி என்ற பெயரிலேயே கொண்டாடப்படும். மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தசரா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இங்கு புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி பண்டிகை துவங்கியது முதல் பத்து நாள் திருவிழாவாக தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற காளி, அம்மன், சிவன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து வருவார்கள். இதற்காக 41 நாட்கள் விரதமிருந்து, சுவாமிகளைப் போல் வேடமணிந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். இந்த திருவிழாவின் போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.
முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
முத்தாரம்மனுக்கு காளி வேடம் போட்டு பலரும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதும் நேர்த்திக்கடன்தான். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வரும் 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 24ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் முடிந்ததும், தங்களது வலது கையில் கப்புகட்டி பின்பு தங்களுக்குப் பிடித்தமான, சிவன், பார்வதி, காளி, துர்கை, கிருஷ்ணர், முருகன், அய்யனார், ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவர். இதில், சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41 மற்றும் 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.
திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். வேடம் அணியும் பக்தர்கள் கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, சடைமுடி, நெற்றி பட்டை, வீரபல், ஒட்டியாணம் உட்பட பல்வேறு வேடப்பொருட்கள் உடன்குடி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தயாராகி, பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த ஆண்டு தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வகையிலான அடையாளங்கள் எதையும் எடுத்து வரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான பனியன்கள் எதையும் அணிந்து வரக் கூடாது. ஜாதிகளை குறிக்கும் பாடல்கள் எதையும் ஒலிபரப்பக் கூடாது. அப்படி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகள் திருச்செந்தூர் போன்ற மற்ற கோவில்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது குலசை தசரா திருவிழாவிலும் அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications