குலசேகரப்பட்டிணத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம்... 'நாசா' தகவல்

இந்தியாவின் 3வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரீசிலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ இயக்க அமைப்பு வாளகம் உள்ளது. இந்த வாளகத்தை உயர்த்தி அறிவிக்கும விழா நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில்,
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ இயகக அமைப்பு மையம் திரவ இயக்க வாளகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனருக்கு உரிய அதிகாரிகள் அனைத்தும் இந்த வாளக இயக்குனருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளி துறையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் 3வது ரக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டிணத்தில் அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவுதளம் உள்ளது. தற்போது 3வது ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டிணம் தகுதியான இடம் என்றும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசி்ன் பரீசிலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.
குலசேகரப்பட்டிணத்தில் 3வது ஏவுதளம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் தென்மாவட்டம் அதிக அளவில் முன்னேறும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications