ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், பண்ணாரி அம்மன் கோவில்களில் இன்று குடமுழுக்கு!!
ராமேஸ்வரம்/ திண்டுக்கல்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.
தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் கடந்த சில ஆண்டுகளுகாக திருப்பணி நடைபெற்று வந்தது. இதற்கு தமிழக அரசும் நிதி உதவி அளித்தது.
ராமேஸ்வரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியில் இரண்டு கோபுரங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த 2 கோபுரங்களுக்கும் சேர்த்து இன்று குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஸ்ரீ காளகத்தீஸ்வரர் - ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில் தரைத்தளத்திலிருந்து நான்கரை அடி ஆழத்தில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த 2012-ம் ஆண்டிற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, கடுமையாக சேதம் அடைந்தது. சிதிலமடைந்த இந்தக் கோயிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
52 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்தில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கொடுங்கை எனும் கற்சிற்ப யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் 4 மூலைகளிலும், 48 யாழித் தூண்கள் நிறுவப்பட்டு, திருவிளையாடல் புராணம், அம்பாள் சரித்திரம் உள்ளிட்ட தெய்வீக பெருமைகளைக் கூறும் காட்சிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேக்குமரத்தால் தயாரிக்கப்பட்ட 42 அடி உயர கொடி மரம், தங்கம் மற்றும் செப்புத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீ சக்கரமும், காளகஸ்தி கோயிலில் உள்ளது போல ராகு-கேது திருவுருவம் ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோவில்களில் குடமுழுக்குவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்று குடமுழுக்கு நடைபெறுவதால் இக்கோவில்கள் உள்ள உள்ளூர் பகுதிகளில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications