கும்பகோணத்தில் 32 குளங்களை காணோம்... ஹைகோர்ட்டில் வழக்கு
தஞ்சாவூர்: கிணத்தைக் காணோம் என்று வடிவேலு ஒரு படத்தில் காமெடி செய்வார்... ஆனால் 32 குளங்களைக் காணோம் என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாயமான குளங்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதீமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா, வரும் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவின் போது, அங்குள்ள புனித குளங்களில் மக்கள் நீராடுவார்கள் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

கும்பகோணத்தில் மொத்தம் 44 புனித குளங்கள் இருந்த நிலையில், தற்போது 12 குளங்கள் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 32 குளங்களை பலர் ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளதாகவும் யானை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார் எனவே காணாமல் போன குளங்களைக் கண்டறிந்து அதிலுள்ள ஆக்கிரமிப்புகளைக் அகற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், கும்பகோணம் நகரிலுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மனுதாரர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அதனுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications