பார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி உறவினர்களிடம் தன்னை சிறையில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி உறவினர்களிடம் தன்னை சிறையில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குன்றத்தூர் அபிராமியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. குன்றத்தூரில் உள்ள பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வாழ்க்கையை இழந்து நிற்கதியாய் நிற்கிறார் அபிராமி.
கள்ளக்காதல் மோகம் கண்ணை மறைக்கவே ஒரு கட்டத்தில் குழந்தைகள் மற்றும் கணவரை உதறிவிட்டு சுந்தரத்தின் வீட்டிலேயே கிடந்த அபிராமியை அவரது தந்தை அடித்து உதைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஈவு இரக்கமின்றி கொலை
இதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதாக எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாய் இருந்ததாக குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்.

கொலை வெறியாட்டம்
கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் அவர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியடைந்தது. பணி நிமித்தமாக கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் மனைவியின் கொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பினார் கணவர் விஜய்.

பாலில் மாத்திரைகள்
கடந்த மாதம் 30 ஆம் தேதி முதலே குழந்தைகளை கொலை செய்யும் பணியை தொடங்கினார் அபிராமி. 30 ஆம் தேதி இரவு கணவர், மகள், மகனுக்கு கொடுத்த பாலில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.

மகன் மூச்சைநிறுத்தி கொலை
இதில் 4 வயது மகள் இறக்கவே, மறுநாள் காலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு 8 வயது மகனை வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்து துடிக்க துடிக்க கொலை செய்தார் அபிராமி.

விடிய விடிய உல்லாசம்
குழந்தைகளை கொன்ற கையோடு கொஞ்சமும் வருத்தமில்லாமல் இரவோடு இரவாக சுந்தரத்தை சந்தித்த அபிராமி அவருடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக விடிய விடிய உல்லாசம் அனுபவித்தார்.

சிக்கிய அபிராமி
விடியற்காலையில் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவில் சென்ற அவரை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து கையும் களவுமாக பிடித்தனர் போலீசார்.

புழல் சிறையில்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்தார் அபிராமி. இதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி.

கைவிட்ட சொந்தங்கள்
சிறையில் எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறாம் அபிராமி. யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வருகிறாம். அவரை இதுவரை அவரது சொந்த பந்தங்கள் என யாரும் சந்திக்கவில்லை.

சிறை அதிகாரிகளிடம் கதறல்
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அபிராமி தனது உறவினர்களிடம் தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு கதறிவருகிறாம். ஆனால் கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற அவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனராம் அபிராமியின் குடும்பத்தினர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications