சோ ராமசாமி காலமானதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு கோரினார்!!
சென்னை: சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார் நடிகை குஷ்பு. வலைத்தளவாசிகளின் எதிர்ப்பினை அடுத்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு.
நடிகரும், ‘துக்ளக்' ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக சில மணி நேரங்களுக்கு முன்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
|
குஷ்பு டுவிட்டர்
குஷ்பு டுவிட்டர்
|
கண்டனம்
இதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் குஷ்புவிற்கு பதில் கூறி வருகின்றனர்.
|
மன்னிப்பு கோரினார்
அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது தவறை உணர்ந்து கொண்ட குஷ்பூ, உடனடியாக தனது பதிவிற்கு மன்னிப்பு கூறினார். ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
|
யோசிங்க குஷ்பு
டுவிட்டர் வாசிகள் அவரை விடுவதாகத் தெரியவில்லை. அவருக்கு எதிராக பொங்கி தீர்த்துவிட்டனர். சாதாரண ஒன்றிற்கு தன்முனைப்புடன் பொங்கி எழும் குஷ்பு, ஒரு முக்கிய பதிவினை வெளியிடும் முன்னர் ஆயிரம் முறை யோசிக்க வேண்டாமா? என்று கூறி கடுமையாக அவரை சாடி வருகின்றனர்.

ஜோதிமணிக்கு கண்டனம்
இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியும் ‘சோ' ராமசாமியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவிற்கும் பலரும் கண்டனம் தெரிவிக்கவே உடனடியாக தனது பதிவினை நீக்கிய ஜோதிமணி, ‘சோ'ராமசாமி அவர்கள் தொடர்பான தவறான தகவலுக்கு வருந்துகிறேன். அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications