சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டிய பாதுகாவலர் கருணாநிதி... குஷ்பு
கரூர்: அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக மக்கள் படும் வேதனைகளை முன்னிறுத்தியும், சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டியவர் கருணாநிதி தான் என்பதை நினைவூட்டியும் கரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் நடிகை குஷ்பு.
திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கரூர் லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் ம.சின்னசாமியை ஆதரித்து பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது :-

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை....
நான் உங்கள் வீட்டு பெண்ணாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். கடந்த தேர்தலில் ஓட்டு போட்டு தற்போது எவ்வளவு கஷ்டங் களை அனுபவித்து வருகிறீர்கள். அதற்கு மின் சாரம் இல்லாமல் இருளில் தவிக்கும் ஒரு உதாரணம் போதுமே.

சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்...
அ.தி.மு.க. வினர் ஓட்டுக்களை பெற்றுவிட்டால் பிறகு மக்களை சந்திப்பதில்லை. அதனால் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.

சிறுபான்மையினரின் பாதுகாவலர்...
சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலை நாட்டியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் சிறுபான்மையினரின் பாது காவலராக விளங்குகிறார்.' எனத் தெரிவித்தார்.

மாற்றத்தை விரும்பும் மக்கள்...
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையத்தில் வாக்குச் சேகரித்த குஷ்பு, ‘கடந்த 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து உள்ளனர். எனவே புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மாணவர்கள் பாதிப்பு...
தமிழகத்தில் தற்போதுள்ள மின்தடை காரணமாக சிறு, குறு தொழில்கள் முடங்கி போய் உள்ளன. மின்தடை காரணமாக மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்' எனக் கூறினார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications