டெல்லி முதல்வர்கள் கூட்டத்தில் ஜெ. படத்தை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்த ஓபிஎஸ்.. குஷ்பு தகவல்!
விருதுநகர்: டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார் குஷ்பு. அப்போதுதான் இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

விருதுநகரில் நடந்த கூட்டத்தில் குஷ்பு பேசியதிலிருந்து...
1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன்.
நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை.
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இருக்கிறது. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன? முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.
பாஜக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று பேசினார் குஷ்பு.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications