குஷ்புவை "லைக்" செய்த பத்து லட்சத்தில் ஒருவரா நீங்க?
சென்னை: குஷ்புவின் பேஸ்புக் பக்கம் பத்து லட்சம் லைக்குகளைத் தொட்டு விட்டதாம். இதற்காக தன்னை லைக் செய்தவர்களுக்கு தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் குஷ்பு.
பேஸ்புக், டிவிட்டர் .. இது இரண்டும்தான் இன்றைய சமுதாயத்தினருக்கு ஆக்சிஜன் போல. இதில் ஏதாவது ஒன்றை பார்க்காவிட்டால் பலருக்கு என்னமோ போலாகி விடும். நாலு பக்கம் பார்த்தோமோ, நாலு பேருக்கு லைக் போட்டோமா, நாமளும் ஏதாவது போஸ்ட் போட்டோமோ, நமக்கு லைக் நாலு வந்துச்சா.. ஓ.கே. அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று நிம்மதி அடைவோர் பலர்.
அதிலும் பிரபலங்களின் பேஸ்புக், டிவிட்டர்களில் லைக்குகள் கூட்டம் அலைமோதும். அதைப் பார்ப்பதற்கும், அதில் உள்ள சுவாரஸ்யங்களைப் பார்த்துப் படித்து ரசிப்பதற்கும் மக்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள்.
இந்த வரிசையில் நடிகை குஷ்புவின் டிவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் பிரபலமானவை. இதில் பேஸ்புக் பக்கம் பத்து லட்சம் லைக்குகளைத் தாண்டியுள்ளது.

1,009,456 லைக்குகள்
குஷ்புவின் பேஸ்புக் பக்கத்தை இதுவரை பத்து லட்சத்து 9 ஆயிரத்து 456 பேர் லைக் செய்துள்ளனர் (புதன்கிழமை காலை 10.48 மணி கணக்கு இது).
| Post by Kushboo Sundar. |
நன்றியும், அன்பும்
நேற்று தனது பேஸ்புக் பக்கத்தின் லைக்குகள் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியதுமே ஒன் மில்லியன் என்ற பெயரில் ஒரு போஸ்ட்டைப் போட்டு நன்றி கூறியிருந்தார் குஷ்பு. அதில், உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று கூறியிருந்தார் குஷ்பு.

அடுத்த போஸ்ட் வெங்கடேஷுடன்
இதையடுத்து அவர் போட்ட அடுத்த போஸ்ட் அவரது முதல் சினிமா ஹீரோ வெங்கடேஷுடன் இணைந்து கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்தது.

கொச்சின் யூத ஆலயத்திற்குப் போனது
அவரது பேஸ்புக்கை அப்படியே ஒரு ரவுண்டு அடித்தபோது சுவாரஸ்யமான பல தகவல்களைக் காண முடிந்தது. கொச்சியில் உள்ள யூத ஆலயத்திற்குப் போயிருந்தபோது எடுத்த படத்தைப் போட்டிருந்தார்.

ஒன் கேபி!
கே.பாலச்சந்தர் குறித்து அவர் ஷேர் செய்திருந்த ஒரு போஸ்ட் படு சுவாரஸ்யமாக இருந்தது. தமிழ் சினிமாவின் அத்தனை நல்ல படங்களையும் ஒரு ஹார்ட் டிரைவில் போட்டால் அதன் கொள்ளளவு 1 KB என்ற அளவில்தான் இருக்கும் என்பது அந்த போஸ்ட்டின் தமிழாக்கம்...!

ஆம்பள கொண்டாட்டம்
ஆம்பள படம் குறித்த சில ஜாலியான போஸ்ட்டுகளையும் காண முடிந்தது குஷ்புவின் பேஸ்புக்கில்.

அவரும், அவருடைய அவரும்!
கடந்த டிசம்பர் மாதம் குஷ்புவும், அவரது வீட்டுக்காரர் சுந்தர்.சியும் வெளிநாட்டுக்கு ஜாலி டிரிப் போனபோது எடுத்த படம் பேஸ்புக்கை அலங்கரிக்கிறது.

சோனியா காந்தியுடன் குஷ்பு
சோனியா காந்தியை சந்தித்தது குறித்து போட்டோவும் பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.
நீங்க லைக் பண்ணிட்டீங்களா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications