குஷ்பு காங்கிரஸில் சேர்ந்துள்ள 'டைமை' பார்க்க வேண்டும்.. பாஜகவுக்கு புதுச்சேரி காங். புது விளக்கம்
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்திருக்கின்ற தருணத்தைப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் அவர் மிக துணிச்சலாக மதச்சார்பின்மையைக் காக்க தேச நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸில் சேர்ந்துள்ளார். பதவி ஆசையில் சேரவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரராகவன் என்பவர் விளக்கியுள்ளார்.
குஷ்புவை விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்து வீரராகவன் விடுத்துள்ள அறிக்கை:

காங்கிரசில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சராக பதவியில் அமர்த்தியுள்ளது. அவருக்கு தெரிந்த வரலாறு, அரசியல் ஆகியவற்றை விட குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு.
முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற தருணத்தை பார்க்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக மதசார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில் கொண்டு கட்சியில் இணைந்துள்ளார். அதிகார பதவிக்கான ஆசையால் அல்ல.
தமிழிசை சவுந்தரராஜன் பாரதீய ஜனதாவில் சேரும் போது அவருக்கு என்ன வரலாறு தெரியும். காந்தியவாதியின் மகளாக பிறந்து காங்கிரஸ் வரலாறு தெரிந்து கொண்டு பின்பு காந்தியவாதத்திற்கு நேர் எதிரான வாதத்தை உயர்த்தி பிடிக்கக்கூடிய வகுப்புவாத கட்சியில் ஐக்கியமாகி இருப்பது சுயநல அரசியல் லாபத்திற்கு தானே?
தமிழிசை ஒரு பெண் என்ற அடிப்படையில், அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முன் வருகின்ற மற்றொரு பெண்ணை பாராட்டவில்லை என்றாலும் ஆணாதிக்க பொறாமை மனப்பான்மையோடு குறைத்து விமர்சனம் செய்யக்கூடாது. அது தவறு என்று கூறியுள்ளார் வீரராகவன்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications